நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு.. திரையரங்கிற்கு போலீசார் நோட்டீஸ்

நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர்.இந்த பிரச்சினை தொடர்பாக கோயம்பேடு போலீசார் மற்றும் தாசில்தார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு.. திரையரங்கிற்கு போலீசார் நோட்டீஸ்
Published on

சென்னை ரோகிணி திரையரங்கில் நேற்று பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துள்ளனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த சம்பவத்திற்கு பலரும் அவர்களின் கண்டன குரல்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தனர்.

இதையடுத்து நரிக்குறவர்களை ஏன் திரையரங்கில் அனுமதிக்கவில்லை என்று ரோகிணி திரையரங்கம் சார்ப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், யுஏ சான்றிதழ் அனுமதி பெற்ற படம் என்பதால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னர் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. மேலும், இந்த பிரச்சினை தொடர்பாக கோயம்பேடு போலீசார் மற்றும் தாசில்தார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், இன்று காவல்துறை தரப்பில் நேற்று சிறப்பு காட்சிக்கான அனுமதியை திரையரங்கம் பெற்றுள்ளதா என்ற நோக்கில் காவல்துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. சிறப்பு காட்சிக்கு அனுமதி பெறப்படவில்லை என்பது உறுதியானால் ரோகிணி திரையரங்கிற்கு முறையான அபராதம் அல்லது ஒரு வாரகாலத்திற்கு திரையரங்கை மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் காவிரி அளித்த புகாரின் பேரில் ரோகிணி திரையரங்க ஊழியர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com