search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தனிப்பட்ட வாழ்கையை விமர்சனம் செய்து யாரையும் கஷ்டப்படுத்தாதீங்க.. நடிகர் சிம்பு வேண்டுகோள்
    X

    சிம்பு

    தனிப்பட்ட வாழ்கையை விமர்சனம் செய்து யாரையும் கஷ்டப்படுத்தாதீங்க.. நடிகர் சிம்பு வேண்டுகோள்

    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் வெந்து தணிந்தது காடு.
    • இப்படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்திருந்த 'வெந்து தணிந்தது காடு' கடந்த 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    வெந்து தணிந்தது காடு

    இந்நிலையில், இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். இவ்விழாவில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சிம்பு, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட படக்குழு பலரும் கலந்துக் கொண்டனர். அப்பொழுது பேசிய சிம்பு, ''இந்த படம் எக்ஸ்பிரிமென்டலான படம். ரெகுலராக கமர்சியல் படங்களில் ஹீரோவோட பில்டப், சாங்ஸ் பர்பாமன்ஸ் எதுவுமே இந்த படத்தில் இல்லை. இது டோட்டலா ரொம்பவும் சீரியஸ் படம்.

    கவுதம் வாசுதேவ் மேனன் - சிம்பு

    தமிழில் இந்த மாதிரி ஒரு படம் ட்ரை பண்ணலாம்'னு கௌதமன் சார் சொன்னாரு. அது எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. இன்று அதனுடைய ரெஸ்பான்ஸ் ரிலீஸ் அப்புறம் பார்க்கும் பொழுது உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதை உண்மையிலேயே கொண்டு போய் சேர்த்தது நீங்க தான். உங்கள் எல்லாருக்கும் எனது நன்றி.

    சிம்பு - ஐசரி கணேஷ்

    இந்த படம் நல்லபடியா படம் ரிலீஸ் ஆச்சு. ஏன் இந்த சந்தோஷம் என்றால் நான் அவ்வளவு வலிய பார்த்து இருக்கேன். நீங்க எல்லாருமே என் கூட இருந்து பார்த்திருக்கிறீங்க. சினிமாவில் ஹீரோ டோட்டலா காலி ஆகி தெருவுக்கே வந்துருவாரு, அதுக்கப்புறம் ஒரு காயினை தூக்கிப் போட்டு அப்புறம் மெதுவா மேல வர மாதிரி, உண்மையிலேயே லைஃப்ல நடப்பது ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது.

    சிம்பு

    இந்த படத்துல என்ன பாராட்டி எழுதுறாங்க. இந்த படத்துல என்னுடைய உடம்பை வச்சி உங்களால ஒன்னுமே எழுத முடியல. எப்போமே சில பேர் என்னுடைய உடம்ப வச்சி தப்பா எழுதுவாங்க. ஒரு படத்தை விமர்சனம் பண்ணலாம் தனிநபருடைய உடம்ப வச்சி விமர்சனம் பண்ணுறது ரொம்ப தப்பு. ரொம்ப வேண்டி கேக்குறேன் தனிப்பட்ட வாழ்கையை உடம்ப வச்சி எழுதி யாரையும் கஷ்டப்படுத்தாதீங்க, நன்றி'' என்றார்.



    Next Story
    ×