தொடர் போஸ்டர்களை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண் படக்குழு

இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் திரைப்படம் 'பார்க்கிங்'.இப்படத்தின் மூன்றாவது போஸ்டரை படக்குழு வெளியிடுள்ளது.
தொடர் போஸ்டர்களை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண் படக்குழு
Published on

பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 'பார்க்கிங்' படத்தில் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைகிறது.

இந்நிலையில் பார்க்கிங் படத்தின் மூன்றாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தொடர் போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது

X

Maalai Malar
www.maalaimalar.com