புதிய பாடலை வெளியிட்ட பார்க்கிங் படக்குழு

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படம் ‘பார்க்கிங்’.இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
புதிய பாடலை வெளியிட்ட பார்க்கிங் படக்குழு
Published on

பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 'பார்க்கிங்' படத்தில் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய பாடலான 'செல்ல கல்லியே' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com