கதாபாத்திரங்களை வெளியிட்ட அசோக் செல்வன் படக்குழு

இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் 'நித்தம் ஒரு வானம்'.இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அசோக் செல்வன்
அசோக் செல்வன்
Published on

இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் படம் 'நித்தம் ஒரு வானம்'. இதில், அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நித்தம் ஒரு வானம்

வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.

நித்தம் ஒரு வானம் போஸ்டர்

அதன்படி, ரித்து வர்மா, சுபா என்ற கதாபாத்திரத்திலும் அபர்ணா பாலமுரளி, மதி என்ற கதாபாத்திரத்திலும் சிவாத்மிகா ராஜசேகர், மீனாட்சி என்ற பாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com