காம்பினேஷன் எங்க போய் முடியுமோ? கவனம் ஈர்க்கும் சைரன் டீசர்

சைரன் படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஆண்டனி பாக்யராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
காம்பினேஷன் எங்க போய் முடியுமோ? கவனம் ஈர்க்கும் சைரன் டீசர்
Published on

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் படம் 'சைரன்'. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம்ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், சைரன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வெளியான சைரன் படத்தின் டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com