நயன் பிறந்தநாளுக்கு விக்கி கொடுத்த பரிசு.. காரின் விலை இவ்வளவா?

நடிகை நயன்தாரா பல படங்களில் நடித்து வருகிறார்.’ஜவான்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
நயன் பிறந்தநாளுக்கு விக்கி கொடுத்த பரிசு.. காரின் விலை இவ்வளவா?
Published on

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா, ரஜினி, விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஷாருக்கானுடன் இவர் இணைந்து நடித்திருந்த 'ஜவான்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வரவேற்பை பெற்று ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

நயன்தாரா பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளை கவனிப்பதற்காக நயன்தாரா சினிமா துறையை விட்டு விலகிவிடுவார் என பலர் நினைத்திருந்தனர். ஆனால் நயன்தாரா குழந்தைகளையும் கவனித்து நடிப்பு மற்றும் பிசினஸ் இரண்டையும் மேனேஜ் செய்து வருகிறார்.

நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் கடந்த 18-ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவிற்கு பிறந்த நாள் பரிசாக மெர்சிடிஸ் மேபேக் கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இதன் விலை ரூ. 2.60 கோடியிலிருந்து ரூ. 3.40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் தொடர்பான புகைப்படத்தை நயன்தாரா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com