லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபலம் யார் தெரியுமா?

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'லவ் டுடே'.இப்படம் திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேலாக ஓடி சாதனை நிகழ்த்தியது.
லவ் டுடே
லவ் டுடே
Published on

ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லவ் டுடே
லவ் டுடே

லவ் டுடே

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ளது. இதனை படக்குழு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தி கொண்டாடினர். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் இந்தி ரீமேக் தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருந்தது. அதன்படி இப்படத்தின் இந்தி ரீமேக்கை பாந்தோம் ஃபிலிம்ஸ் (Phantom Films) உடன் இணைந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

குஷி கபூர் - ஜுனைத்
குஷி கபூர் - ஜுனைத்

குஷி கபூர் - ஜுனைத்

இந்நிலையில் லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் ஆமீர்கானின் மூத்தமகன் ஜுனைத்தும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் நடிக்கவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com