என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
இதை நான் எப்படி திரும்ப கொடுக்கப் போகிறேன்.. லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ந்து பதிவிட்டிருக்கிறார். அதில், நான் இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டதில்லை. எனக்கும், விக்ரம் படத்திற்காக நீங்கள் வழங்கி வரும் பேராதரவு வியப்படைய வைக்கிறது. இந்த அன்பை நான் எப்படி திரும்ப கொடுக்கப் போகிறேன் என்று தெரியவில்லை என்றும் கமல்ஹாசன் சாருக்கும் மக்களுக்கும் நன்றியுடன் இருப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
I haven't been this emotional ever.The acceptance u've showed #Vikram and me has been so overwhelming.I don't know how i'm gonna repay you guys for all this love.Ever grateful to @ikamalhaasan sir and my amazing people. So moved. Love you all 🙏🏻🙏🏻🙏🏻
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 5, 2022