இயக்குனர் பாக்யராஜ் மறைவு: சிம்ரன், ராகவா லாரன்ஸ், ஹரிஷ் கல்யாண் இரங்கல்

தமிழ் சினிமா தனது மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவரை இழந்துவிட்டது.
Bharathiraja death
Published on

பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இயக்குனர் பாக்யராஜ் மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சிம்ரன் மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆகியோரும்இரங்கல் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

பாக்யராஜ் ஐயாவின் மறைவுச் செய்தி உண்மையிலேயே நெஞ்சை நொறுக்குகிறது. அவர் ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட திரைப்பட இயக்குநர், சிறந்த கதைசொல்லி மற்றும் மிகச்சிறந்த நடிகர்.

அவர் தனது படைப்புகள் மூலம் சிரிப்பையும், அன்பையும், அர்த்தமுள்ள சமூகச் செய்திகளையும் கொண்டு வந்தார். தமிழ் சினிமா தனது மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவரை இழந்துவிட்டது.

இந்த இக்கட்டான நேரத்தில் என் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ராகவ லாரன்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

இயக்குநர் பாக்யராஜ் ஐயாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சினிமாவுக்கு அவரது பங்களிப்பு மறக்க முடியாதது, மேலும் அவரது படைப்புகள் பல தலைமுறையினருக்கு உத்வேகம் அளித்துள்ளன. இது திரையுலகிற்கு ஒரு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

பாக்யராஜ்க்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது திரைப்படங்களும் எழுத்தும் எங்கள் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரின் அற்புதமான திரைப்படங்கள் மற்றும் மறக்க முடியாத நடிப்புகளின் மரபு, என்றென்றும் எங்களுக்கு வழிகாட்டியாகவும் உத்வேகமாகவும் திகழும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com