

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில், ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு உள்ளது.
ஜெ.ஆர்.30 படக்குழு
இதைத்தொடர்ந்து, இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படத்தில் நடிக்கிறார். ஜெ.ஆர்.30 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். மேலும், இதில் நட்டி, வி.டி.வி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஜெ.ஆர்.30 படக்குழு
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்நிலையில், ஜெயம் ரவி நடிக்கும் 30-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இப்படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.