கேரளாவில் 2 நடிகர்களுக்கு நடிக்க தடை.. போதைபொருள் பயன்படுத்தும் 10 பேர் பட்டியல் வெளியீடு

மலையாள திரையுலகில் போதை பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார் கிளம்பியது.இதனால் மலையாள படப்பிடிப்பு உள்ளிட்ட சினிமா தொழில் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டினர்.
ஷான் நிகாம் - ஸ்ரீநாத் பாசி 
ஷான் நிகாம் - ஸ்ரீநாத் பாசி 
Published on

மலையாள திரையுலகில் போதை பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார் கிளம்பியது. இதனால் மலையாள படப்பிடிப்பு உள்ளிட்ட சினிமா தொழில் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக மலையாள திரையுலகின் இளம் நடிகர்கள் ஷான் நிகாம், ஸ்ரீநாத் பாசி ஆகியோருக்கு தயாரிப்பாளர் சங்கம் சினிமாவில் நடிக்க தடை விதித்தது. மேலும் மலையாள திரையுலகில் போதைக்கு அடிமையானவர்கள் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிப்போம் எனவும் மலையாள சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்தனர்.

இந்த நிலையில் கேரளாவில் போதை பொருள் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில் கேரள சினிமா உலகில் சில தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் என 10 பேர் பற்றிய தகவல் கிடைத்து இருப்பதாகவும், அவர்கள் பற்றிய பட்டியலை தயாரித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கு சினிமா பிரமுகர்களிடம் இருந்து போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர். என்றாலும் போதை பொருள் சப்ளை செய்வோரை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com