என் மலர்
சினிமா செய்திகள்

ஜூடோ ரத்தினம்
பிரபல சண்டை பயிற்சி இயக்குனர் ஜூடோ ரத்தினம் காலமானார்
- தென்னிந்திய திரையுலகின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குனராக வலம் வந்தவர் ஜூடோ ரத்தினம்.
- 92 வயதாகும் ஜூடோ ரத்தினம் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குனராக வலம் வந்தவர் ஜூடோ ரத்தினம். இவர் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேல் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். பெரும்பாலான ரஜினி படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ள ஜூடோ ரத்தினம், ரஜினியுடன் 46 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். 2019-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் ஜூடோ ரத்னம் பெற்றார்.
ஜூடோ ரத்தினம்
92 வயதான ஜூடோ ரத்தினம், உடல்நல குறைவால் குடியாத்தத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக ஜூடோ ரத்தினம் உயிரிழந்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story






