இளையராஜாவாக தனுஷ்.. பிரபல இயக்குனர் பால்கி விருப்பம்

தனுஷ் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான ஷமித்தாப் படத்தை இயக்கியவர் பால்கி.இவர் இளையராஜாவின் வாழ்க்கை கதையை படமாக்குவதே என் கனவு என்று நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.
இளையராஜாவாக தனுஷ்.. பிரபல இயக்குனர் பால்கி விருப்பம்
Published on

சீனி கும், பா, தனுஷ் அமிதாப்பச்சன் நடித்த ஷமித்தாப், பேட் மேன், மிஷன் மங்கள் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் ஆர்.பால்கி. இவர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்ற ஆந்தாலஜி படத்தை இயக்கியிருந்தார்.

பிரபல இயக்குனராக வலம் வரும் பால்கி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இளையராஜாவின் வாழ்க்கை கதையை படமாக்குவதே என் கனவு என்று கூறியுள்ளார். அதில், தனுஷ் நடிப்பில் இளையராஜாவின் வாழ்க்கைக் கதையை படமாக்குவதே என் கனவு. தனுஷ் இளையராஜாவைப் போல இருக்கிறார். இந்த கதை படமாக்கப்பட்டால், என்னை போன்ற ஒரு இளையராஜா ரசிகனுக்கு நான் கொடுக்கும் பரிசாக இருக்கும் என்று பால்கி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com