ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்து ரசித்த தனுஷ்

நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. இந்த போட்டியை நடிகர் தனுஷ் நேரில் சென்று பார்த்து ரசித்தார்.
ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்து ரசித்த தனுஷ்
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது.

ஐபிஎல் போட்டியை கண்டுகளித்த தனுஷ்
ஐபிஎல் போட்டியை கண்டுகளித்த தனுஷ்

இதையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூரு அணி 8 விக்கெட்டுக்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியை நடிகர் தனுஷ் நேரில் சென்று கண்டுகளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com