சம்பளத்தை உயர்த்திய தனுஷ்? குழப்பத்தில் தயாரிப்பாளர்கள்

தனுஷின் கைவசம் தற்போது நானே வருவேன், வாத்தி படங்கள் உள்ளன.திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் அவரின் சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது.
தனுஷ்
தனுஷ்
Published on

தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து தமிழில் ஜெகமே தந்திரம், மாறன், இந்தியில் அந்த்ராங்கி ரே மற்றும் ஹாலிவுட்டில் தி கிரே மேன் ஆகிய படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்றன. தற்போது திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி முந்தைய படங்களை விட அதிக வரவேற்பு பெற்று வசூலை குவித்து வருகிறது. இதுவரை ரூ.20 கோடி சம்பளம் வாங்கி வந்த தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியால் அடுத்து நடிக்க உள்ள புதிய படங்களுக்கு ரூ.30 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரிடம் சம்பளத்தை குறைக்கும்படி தயாரிப்பாளர்கள் நிர்ப்பந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

தனுஷ்
தனுஷ்

தனுஷ்

தனுஷ் கைவசம் தற்போது நானே வருவேன், தமிழ், தெலுங்கில் தயாராகும் வாத்தி படங்கள் உள்ளன. இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. நானே வருவேன் படத்தை செல்வராகவன் இயக்கி உள்ளார். இதில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. வெங்கி அட்லூரி இயக்கி வரும் வாத்தி படத்தின் நாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். அடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் நடிக்க தனுஷ் தயாராகி வருகிறார். மேலும் வட சென்னை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களிலும் தனுஷ் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com