அடுத்த அதிரடிக்கு ரெடியான தனுஷ்- வைரலாகும் புகைப்படம்

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அடுத்த அதிரடிக்கு ரெடியான தனுஷ்- வைரலாகும் புகைப்படம்
Published on

நடிகர், பாடகர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்ட நடிகர் தனுஷ் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' திரைப்படம் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படம் வசூலையும் குவித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 50-வது படத்தை அவரே இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவரின் 51-வது படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான சேகர் கம்முலா இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகவுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு சிறிய பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com