சரக்குக்கு நாங்க அடிமை இல்ல.. ஊறிப்போன சம்பிரதாயத்துக்கு.. கவனம் ஈர்க்கும் நானி பட டீசர்

நானி - கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘தசரா’.இப்படம் வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தசரா
தசரா
Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது 'தசரா' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

தசரா

மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானது.

தசரா

இதையடுத்து இப்படத்தின் டீசர் இன்று மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com