சந்திரமுகி 2: இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இணைந்த கங்கனா ரனாவத்

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
 கங்கனா ரனாவத்
 கங்கனா ரனாவத்
Published on

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.

சந்திரமுகி 2

தற்போது 'சந்திரமுகி 2' என்ற பெயரில் இப்படம் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 கங்கனா ரனாவத் பதிவு

சமீபத்தில் இப்படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ஹைதராபாத்தில் நடைபெறும் 'சந்திரமுகி 2'படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகை கங்கனா இணைந்துள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com