பூஜையுடன் தொடங்கிய சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு

இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் சந்திரமுகி 2.சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மைசூரில் தொடங்கியுள்ளது.
சந்திரமுகி 2
சந்திரமுகி 2
Published on

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே வாசு முயற்சித்து வந்தார். ஆனால் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து இரண்டாம் பாகத்தை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார். அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இப்படம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். இந்த நிலையில், மைசூரில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ள்ளது. விரைவில் படபிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com