பிக்பாஸ் நடிகையிடம் அத்துமீறல்.. பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது வழக்குப்பதிவு

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிக்பாஸ் புகழ் அர்ச்சனா கவுதம் போட்டியிட்டார்.அர்ச்சனாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் மீரட் போலீசார் சந்தீப்சிங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அர்ச்சனா கவுதம்
அர்ச்சனா கவுதம்
Published on

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் மாநாடு கடந்த மாதம் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் பிரதிநிதிகள் சுமார் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிக்பாஸ் புகழ் அர்ச்சனா கவுதம் கலந்து கொண்டார். அப்போது பிரியங்கா காந்தியை சந்திக்க அர்ச்சனா கவுதம் அவரது உதவியாளரான சந்தீப் சிங்கிடம் பேசி உள்ளார்.

பிரியங்கா காந்தியுடன் அர்ச்சனா கவுதம்
பிரியங்கா காந்தியுடன் அர்ச்சனா கவுதம்

பிரியங்கா காந்தியுடன் அர்ச்சனா கவுதம்

ஆனால் அர்ச்சனாவை, பிரியங்கா காந்திக்கு அறிமுகப்படுத்த சந்தீப் சிங் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் அர்ச்சனாவை, சந்தீப் சிங் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், அநாகரீக வார்த்தைகளால் பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அர்ச்சனா புகார் கூறினார். இது தொடர்பாக அர்ச்சனாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் மீரட் போலீசார் சந்தீப்சிங் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com