பாரதிராஜா-மனோஜ் பாரதிராஜா படத்தின் டைட்டில் வெளியானது

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாரதிராஜா - மனோஜ் பாரதிராஜா
பாரதிராஜா - மனோஜ் பாரதிராஜா
Published on

இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக பாராதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் தமிழில் தாஜ்மகால் படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், ஈர நிலம், மகா நடிகன், வாய்மை, மாநாடு உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.

மனோஜ் - மணிரத்னம் - சுசீந்திரன்
மனோஜ் - மணிரத்னம் - சுசீந்திரன்

மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர் இயக்கவிருக்கும் படத்தில் புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கவுள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது.

மார்கழி திங்கள்
மார்கழி திங்கள்

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்திற்கு 'மார்கழி திங்கள்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்க உள்ளது. மேலும் படப்பிடிப்பை தேனி மற்றும் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படம் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com