search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பகாசூரன் படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்று.. ஓ இது தான் விஷயமா..?
    X

    பகாசூரன்

    'பகாசூரன்' படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்று.. ஓ இது தான் விஷயமா..?

    • இயக்குனர் செல்வராகவன் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘பகாசூரன்’.
    • ’பகாசூரன்’ திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. அதன்பின்னர் இவர் இயக்கிய 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இப்படங்களை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.


    பகாசூரன்

    இந்த படத்திற்கு சாம்.சிஎஸ் இசையமைக்கிறார். 'பகாசூரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், 'பகாசூரன்' படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.


    பகாசூரன் போஸ்டர்

    மேலும், 'பகாசூரன்' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாகவும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×