பாராட்டுகளை குவிக்கும் 'அயலி' அபி நட்சத்திராவின் 'பார்வை' இசை ஆல்பம்

'பிஸ்கோத்', 'காசேதான் கடவுளடா' ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ் பிரதாப் இசையில் உருவாகி இருக்கும் வீடியோ இசை ஆல்பம் 'பார்வை'.இதில் 'அயலி' இணையத் தொடர் மூலம் பிரபலமடைந்த அபி நட்சத்திரா நடித்துள்ளார்.
அபி நட்சத்திரா
அபி நட்சத்திரா
Published on

'பிஸ்கோத்', 'காசேதான் கடவுளடா' ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ் பிரதாப் இசையில் உருவாகி இருக்கும் வீடியோ இசை ஆல்பம் 'பார்வை'. இந்த பாடலை பாடலாசிரியர் அருண் பாரதி எழுத, பாடகி எம். எம். மானஸி மற்றும் பாடகர் சாய் விக்னேஷ் இணைந்து பாடியுள்ளனர். 'அயலி' இணையத் தொடர் மூலம் பிரபலமான நடிகை அபி நட்சத்திரா நடிப்பில் இந்த தனிப்பாடல் உருவாகியுள்ளது.

அபி நட்சத்திரா
அபி நட்சத்திரா

அபி நட்சத்திரா

இந்தப் பாடலுக்கான காணொளியை பிரசாந்த் ராமன் இயக்கியிருக்கிறார். ஈஸ்வரன் கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த ஆல்பத்தை தரணி பால்ராஜ் தொகுத்திருக்கிறார். இதனை துர்ம் புரொடக்சன் ஹவுஸ் சார்பில் தயாரிப்பாளர் தம்பிதுரை மாரியப்பன் தயாரித்திருக்கிறார்.

அபி நட்சத்திரா
அபி நட்சத்திரா

அபி நட்சத்திரா

பெண்கள் தினசரி தங்களது நடைமுறை வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு செல்லும்போது அவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்கள் குறித்தும், பெண்கள் மீதான ஆண்களின் தவறான பார்வையை மையப்படுத்தியும் இந்த பாடல் உருவாகியுள்ளது. சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் வகையில் 'பார்வை' எனும் தனிப்பாடலை இணையத்தில் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com