சூப்பர் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயனின் அயலான் படக்குழு

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.இப்படத்தின் டீசர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
Published on

டாக்டர், டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் அயலான். இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

அயலான்
அயலான்

அயலான்

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் தயாராகி கொண்டிருப்பதாகவும் விரைவில் டீசரை வெளியிடவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com