முதல் பாடலை வெளியிட்ட அருள்நிதி படக்குழு

இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் வருகிற மே 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கழுவேத்தி மூர்க்கன்
கழுவேத்தி மூர்க்கன்
Published on

கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் இணைந்துள்ளார்.

இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான 'அவ கண்ண பாத்தா' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல் வடிவில் உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com