திருமணம் செய்து கொள்ளவில்லை டேட்டிங் மட்டுமே செய்கிறோம் - பிரபல நடிகை

நடிகை சுஷ்மிதா சென் ரட்சகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.இவர் தற்போது லலித் மோடியை டேட்டிங் செய்கிறார்.
லலித் மோடி - சுஷ்மிதா சென்
லலித் மோடி - சுஷ்மிதா சென்
Published on

நடிகை சுஷ்மிதா சென் 1997-ஆம் ஆண்டு வெளிவந்த ரட்சகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு இல்லாத காரணத்தினால் பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கு பிரபல நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.

2000-ஆம் ஆண்டில் ரேனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். அதன் பிறகு 2019-ல் அலிசா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார். இவ்வாறு திருமணம் செய்து கொள்ளாமல் குழந்தையை மட்டும் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

லலித் மோடி - சுஷ்மிதா சென்

இந்நிலையில், 46 வயதாகும் நடிகை சுஷ்மிதா சென், 56 வயதான தொழில் அதிபர் லலித் மோடியுடன் டேட்டிங்கில் இருக்கிறார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக லலித் மோடி தனது சமூகவலைதளப் பக்கத்தில், மாலத்தீவில் நடிகை சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் படங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மாலத்தீவு உள்ளிட்ட உலக சுற்றுலாவை முடித்துவிட்டு லண்டன் திரும்பியுள்ளோம். புதிய வாழ்க்கை, புதிய பயணம்" என மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

லலித் மோடி - சுஷ்மிதா சென்

மேலும், அவர் பதிவிட்டிருக்கும் மற்றொரு பதிவில், இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் மட்டுமே செய்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அதுவும் ஒரு நாள் நடக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com