தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை.. நடிகை அம்ரிதா

பிகில், படைவீரர், லிப்ட், காபி வித் காதல், வணக்கம்டா மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அமிர்தா ஐயர்.தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை என்று அமிர்தா ஐயர் தெரிவித்துள்ளார்.
அமிர்தா
அமிர்தா
Published on

பிகில், படைவீரர், லிப்ட், காபி வித் காதல், வணக்கம்டா மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அமிர்தா ஐயர். இவர் கோவை பி.என். புதூரில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அமிர்தா
அமிர்தா

அமிர்தா

நான் அடுத்ததாக அனுமன் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன். தமிழ் படத்தில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருகிறேன். தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை. திறமை உள்ள நடிகைகள் அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

அமிர்தா
அமிர்தா

அமிர்தா

கோவைக்கு நான் சிறு வயதிலிருந்தே வந்து கொண்டிருக்கிறேன். கல்லூரி படிக்கும் போது பலமுறை கோவை வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் வரும் போதும் புது அனுபவமாக உள்ளது. எனக்கு கோவை உணவு என்றால் மிகவும் பிடிக்கும். ஒவ்வொரு முறை வரும்போதும் கோவை உணவை ருசிப்பதில் ஆர்வமாக இருப்பேன். நேற்று வந்த போது ஒரு இனிப்பு வகை சாப்பிட்டேன். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com