வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம்.இவர் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டார்.
வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம்
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள "பொன்னியின் செல்வன்" திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் "சியான் 61" என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

விக்ரம்

ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் சீயான் விக்ரம். இவர் அவருடன் பணியாற்றும் சகஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன்.

அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடிகர் விக்ரம் வீட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகனான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

விக்ரம்

இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக் - வர்ஷினியின் திருமணத்தில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். மேலும், விக்ரமின் ரசிகர்களும், ரசிகர்மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com