நடிகர் மயில்சாமி உடலுக்கு கண்ணீர் மல்க நடிகர் செந்தில் அஞ்சலி

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.இவரது உடலுக்கு நடிகர் செந்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் மயில்சாமி உடலுக்கு கண்ணீர் மல்க நடிகர் செந்தில் அஞ்சலி
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான மயில்சாமி, இன்று அதிகாலை 3.30 அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 57 வயதாகும் மயில்சாமி சிறிய பெரிய வேடங்களில் என சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமலின் அபூர்வ சகோதரர்கள், ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்த நகைச்சுவை நடிகர் செந்தில் உடைந்து கண்ணீர் மல்க செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, மயில்சாமி நல்ல நடிகர், நடிகர் மட்டும் இல்லை எதார்த்தமான மனிதர். அவர் எல்லோரிடமும் நன்றாக பழகுவார். அன்பாக பழகக்கூடியவர். மயில்சாமிகிட்ட நைட் கூட பேசுனே. என்று செந்தில் கண்கலங்கிக் கொண்டே பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com