சோழ சாம்ராஜ்யத்தின் தன அதிகாரி.. பொன்னியின் செல்வன் படம் குறித்து சரத்குமார் டுவீட்

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.’பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சோழ சாம்ராஜ்யத்தின் தன அதிகாரி.. பொன்னியின் செல்வன் படம் குறித்து சரத்குமார் டுவீட்
Published on

விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் -2. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் தொடர்சியாக வெளியாகி படத்தின் மீதான மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் - சரத்குமார்
பொன்னியின் செல்வன் - சரத்குமார்

பொன்னியின் செல்வன் - சரத்குமார்

இந்நிலையில் பொன்னியின் செல்வன் -2 படம் குறித்து நடிகர் சரத்குமார் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. அதில், #PS1 வெற்றியைத் தொடர்ந்து, மக்களின் பேராதரவுடன் நாளை மறுதினம் (28.04.2023) மீண்டும் திரையரங்கம் நோக்கி பொன்னியின் செல்வன் – பாகம் 2 #PS2 – ல் சோழர்கள் வருகிறார்கள். திருப்புமுனையுடன் அமைந்த வரலாற்று நாவலின் இறுதி நகர்வினை குடும்பத்துடன் திரையரங்கம் வந்து கண்டு மகிழுங்கள். அன்புடன் அழைக்கும் சோழ சாம்ராஜ்யத்தின் தன அதிகாரி – பெரிய பழுவேட்டரையர் என்று பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com