என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி
    X

    திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி

    • பிரபல சண்டை பயிற்சி இயக்குனராக வலம் வந்த ஜூடோ ரத்தினம் நேற்று வயது மூப்பு காரணமாக காலமானார்.
    • இவரின் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குனராக வலம் வந்தவர் ஜூடோ ரத்தினம். இவர் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேல் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். பெரும்பாலான ரஜினி படங்களுக்கு சண்டை பயிற்சி இயக்குனராக பணியாற்றியுள்ள ஜூடோ ரத்தினம், ரஜினியுடன் 46 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். 2019-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் ஜூடோ ரத்னம் பெற்றார்.



    92 வயதான ஜூடோ ரத்தினம், உடல்நல குறைவால் குடியாத்தத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில் சென்னை வடபழனியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஜூடோ ரத்தினத்தின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, சண்டை பயிற்சியில் தனக்கென தனி பாணி உருவாக்கி சாதனை படைத்தவர் ஜூடோ ரத்தினம். கதாநாயகர்களின் பாதுகாப்பை போன்று உதவியாளர்களின் பாதுகாப்பை எப்போது கவனத்தில் கொண்டு சண்டை பயிற்சி மேற்கொள்வார். 93 ஆண்டுகள் வாழ்ந்த மறைந்துள்ளார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றார்.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள இடுகாட்டில் இன்று மாலை 3 மணி அளவில் அவருடைய உடல் தகனம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×