லைக்குகளை குவிக்கும் ராகவா லாரன்ஸ் படத்தின் முதல் பாடல் புரோமோ

ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வரும் திரைப்படம் ருத்ரன்.இப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
லைக்குகளை குவிக்கும் ராகவா லாரன்ஸ் படத்தின் முதல் பாடல் புரோமோ
Published on

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் தோற்ற போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. மேலும் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலான ' பாடாத பாட்டெல்லாம்' பாடல் இன்று வெளியாகவுள்ள நிலையில், இதன் புரோமோ வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com