தண்ணி நல்லது.. டாஸ்மாக் நல்லதல்ல.. நடிகர் ராதாரவி பேச்சு

கேஎன்ஆர் ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் ‘மாவீரன் பிள்ளை’.இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ராதாரவி
ராதாரவி
Published on

கேஎன்ஆர் மூவிஸ் சார்பில் கேஎன்ஆர் ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் 'மாவீரன் பிள்ளை'. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். இதில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 21 நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.

ராதாரவி
ராதாரவி

ராதாரவி

இப்படம் மதுவின் கொடுமைகளையும், மதுவிற்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் உருவாகியுள்ளது. 'மாவீரன் பிள்ளை' திரைப்படத்தை அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலகினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த பிறகு நடிகர் ராதாரவி பேசியதாவது, "மதுவை ஒழிப்போம்.. மக்களை காப்பாற்றுவோம்.. விவசாயிகளை காப்பாற்றுவோம்.. பெண்களை காப்பாற்றுவோம் என ஒரு நல்ல கருத்தை இதில் சொல்லி இருக்கிறார்கள்.

ராதாரவி
ராதாரவி

ராதாரவி

இந்த படத்தில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படம் பார்க்கும்போது இது நான் நடித்த படமா என ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு மாறுதலாக இருக்கிறது. தண்ணீர் எவ்வளவு நல்லது ஆனால் டாஸ்மாக் நல்லதல்ல என்பதை தான் இதில் காட்டியிருக்கிறார்கள்.. இது ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com