இயக்குனர் சேரனுடன் இணையும் சுதீப்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சுதீப்.இவர் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்து வருகிறார்.
சேரன் -கிச்சா சுதீப்
சேரன் -கிச்சா சுதீப்
Published on

பிரபல கன்னட நடிகர் சுதீப் தமிழில் வெளியான 'நான் ஈ' படத்தில் சமந்தாவுடன் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் வெளியாகி ஹிட்டான சேது மற்றும் ஆட்டோகிராப் போன்ற படங்களின் ரீமேக்கிலும் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் 'புலி' படத்திலும் நடித்து இருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'கப்ஜா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

கிச்சா சுதீப்

இந்நிலையில், நடிகர் சுதீப் இயக்குனர் சேரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சுதீப் அடுத்து மூன்று படங்களில் நடிக்கவுள்ளதாகவும் அதில் 2 படங்களை இயக்குனர்கள் சேரன் மற்றும் கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு கர்நாடக தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கன்னட சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடக்கவுள்ள நிலையில், பா.ஜ.கவுக்கு ஆதரவாக நடிகர் சுதீப் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com