என் மலர்

  சினிமா செய்திகள்

  என் சினிமா பயணத்தில் இதுதான் எனக்கு ஸ்பெஷல் மூவி- மனம் திறந்த நடிகர் ஆர்யா
  X

  ஆர்யா

  என் சினிமா பயணத்தில் இதுதான் எனக்கு ஸ்பெஷல் மூவி- மனம் திறந்த நடிகர் ஆர்யா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கும் படம் கேப்டன்.
  • இப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  டெடி, சார்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா நடித்துள்ள கேப்டன் திரைப்படம் வருகிற 8-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

  இப்படத்திற்காக தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் நடிகர் ஆர்யா சென்று கேப்டன் திரைப்படத்தின் டிரைலரை ரசிகர்களுடன் பார்வையிட்டு வருகிறார். கோவையில் உள்ள தியேட்டரில் ரசிகர்களுடன் கேப்டன் படத்தின் டிரைலரை நடிகர் ஆர்யா பார்த்து, அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

  கேப்டன்

  அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, எனக்கு ஸ்பெஷல் மூவி என்றால் அது ராஜா ராணி தான். அந்த படத்திற்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கியுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேபோன்று வித்தியாசமான முறையில் தற்போது கேப்டன் படத்தை எடுத்துள்ளோம். அனைவரும் திரையரங்குக்கு வந்து திரைப்படத்தை காண வேண்டும்.

  ஆர்யா

  இந்த திரைப்படம், ஆர்மி பேக் கிரவுண்ட்டை மையமாக கொண்டு கதை தயாரிக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஹாலிவுட் படம் போல் இருக்கும். பொதுமக்களுக்கு நல்ல கதைகள் பிடிக்கிறது. நல்ல கதைகளை விரும்பி பார்க்கின்றனர் என்றார்.

  Next Story
  ×