காதல்.. குடும்பம்.. 'சினம்' குறித்து நடிகர் அருண் விஜய் பேட்டி

ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார்.இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் கோவையில் திரையிடப்பட்டது.
அருண் விஜய்
அருண் விஜய்
Published on

1995-ல் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். இவர் தற்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கவுதம் மேனன் இயக்கிய 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த பின் அவருடைய கதை தேர்வு வித்யாசமானதாக இருந்தது. தொடர்ந்து அவர் நடித்த 'தடம்', 'குற்றம் 23', 'செக்கச் சிவந்த வானம்', 'மாஃபியா' ஆகிய படங்களின் வெற்றி, அருண் விஜய்க்கு திருப்பங்களாக அமைந்தன.

சினம்
சினம்

சினம்

தற்போது அருண் விஜய், ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கியிருக்கும் சினம் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக பாலக் லால்வாணி நடித்திருக்கிறார். இந்த படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் 16-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சினம்
சினம்

சினம்

இந்நிலையில், கோவையில் உள்ள திரையரங்கில் சினம் படத்தின் முன்னோட்ட காட்சிகள் திரையிடப்பட்டன. இதில் நடிகர் அருண்விஜய், நடிகை பாலக் லால்வாணி பங்கேற்றனர். பின்னர் அருண் விஜய் நிருபர்களிடம் கூறியதாவது, அனைத்து குடும்பத்திலும் இருக்கிற கோபத்தை தான் அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கின்றோம்.

சினம்
சினம்

சினம்

அதனையே கதை கருவாக கொண்டு இந்த படமும் எடுக்கப்பட்டுள்ளது. எதார்த்தமான கேரக்டர் தான் இந்த படத்தில் உள்ளது. சாதாரண சப்-இன்ஸ்பெக்டர் அவனுக்கும் ஒரு குடும்பம், காதல் என ஆரம்பித்து அவனை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறது. எந்த இடத்தில் அவன் கோபம் அடைகிறான் என்பதை அழகா இயக்குனர் அமைத்துள்ளார் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com