20 வருட திரைப்பயணத்தில் பிரபாஸ்.. கொண்டாடும் ரசிகர்கள்..

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் பிரபாஸ். இவர் திரைத்துறையில் அறிமுகமாகி 20 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது.
பிரபாஸ்
பிரபாஸ்
Published on

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவரின் ரசிகர் பட்டாளம் விரியத் தொடங்கியது. தொடர்ந்து இவர் நடித்த படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெற்றது. தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பிரபாஸ்

இந்நிலையில், நடிகர் பிரபாஸ் திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 20 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது. இதனை இவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், சமூக வலைதளத்தில் 20 இயர்ஸ் ஆப் பிரபாஸ் (#20YearsofPrabhas) என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com