ஒரு முறை மட்டும் நிகழ்வதல்ல காதல் - தமன்னா

நாம் ஒருவரை நேசிக்க வேண்டும் என்றால் அவர்களை சுதந்திரமாக விட வேண்டும்.
ஒரு முறை மட்டும் நிகழ்வதல்ல காதல் - தமன்னா
Published on

நடிகை தமன்னா காதல் குறித்து அளித்த பேட்டியில் பல கருத்துக்களை கூறியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது:-

காதல் என்றால் என்ன உறவு என்பதில் மக்கள் குழப்பம் அடைகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். காதல் ஒரு பரிவர்த்தனையாக மாறும் அபாயம் உள்ளது. உங்களுக்கு எதிர்பார்ப்புகள் இருந்து மற்றவர்கள் நீங்கள் விரும்புவதை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பும் தருணத்தில் காதல் வெறும் வியாபாரம்... ஒரு பரிவர்த்தனை தான்..

இருவர் தனித்தனியாக ஒருவரை ஒருவர் காதலிக்கலாம். ஆனால் அந்த உறவே காதலை வரையறுக்கிறது என்று அர்த்தமல்ல.. நாம் ஒருவரை நேசிக்க வேண்டும் என்றால் அவர்களை சுதந்திரமாக விட வேண்டும். உங்கள் எண்ணங்களை அவர்கள் மீது திணிப்பதன் மூலம் நீங்கள் நேசிக்க முடியாது.

ஒரே ஒரு உண்மையான காதல் என்ற வழக்கமான சினிமா கருத்தை உடைத்து காதல் என்பது ஒரே ஒரு அனுபவத்திற்கு மட்டும் உரியதல்ல. காதல் என்பது ஒரு முறை மட்டும் நிகழும் ஒன்றல்ல. நீங்கள் தீர்மானிக்கும் வரை அது நிகழலாம். அந்த உணர்ச்சி வெளிப்புற சக்திகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது உள்ளுக்குள் உருவாக்கப்படுகிறது.

இவ்வாறு தமன்னா காதல் குறித்து கூறியுள்ளார்.

தமன்னா நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com