

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் மே மாதம் 15-ந்தேதி வெளியான ‘கருப்பு’ திரைப்படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த கமர்ஷியல் கம்பேக் படமாக அமைந்துள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் படம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவுடன் வசூலை குவித்தது.
‘கருப்பு’ படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’. மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா தாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’ படத்தை தொடர்ந்து ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகும் Suriya 47 திரைப்படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். ஒரு அதிரடி ஆக்ஷன் பொழுதுபோக்குத் திரைப்படமாக இது உருவாகி வருகிறது. இப்படம் டிசம்பர் மாதத்திலோ அல்லது 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, Suriya 48 படத்தை டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து சூர்யா தனது 50-வது படத்தை நோக்கி நகரவுள்ள நிலையில், அப்படம் குறித்து இயக்குநர் நெல்சன் உடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது நெல்சன் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கும் பணியில் மும்முரமாக இருப்பதால், சூர்யாவின் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் Suriya 50 குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.