

மாலிக் ராம் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி உள்ள காமெடி இணையத் தொடர் சூப்பர் சுப்பு. கிராமத்து பின்னணியில் வாழும் சுப்பிரமணியம் சில்லுகுரி ராவ் என்ற அப்பாவி இளைஞனுக்கு, எதிர்பாராத விதமாக செக்ஸ் எஜூகேஷன் (பாலியல் கல்வி) ஆசிரியராக வேலை கிடைக்கிறது.
பழமைவாத கிராம மக்களிடையே அவர் சந்திக்கும் நகைச்சுவையான சவால்களே இத்தொடரின் கதை. சந்தீப்புடன் மிதிலா பல்கர், முரளி சர்மா, கெட்அப் சீனு, பிரம்மானந்தம் ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்தொடர் ஜூலை 2ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளநிலையில் இன்று டிரெய்லர் வெளியாகி உள்ளது. தெலுங்கில் உருவாகியுள்ள இத்தொடர், தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.