சூப்பர்கர்ல்- திரை விமர்சனம்
சூப்பர்கர்ல்- விமர்சனம்(3 / 5)
கிரிப்டான் கிரகம் அழிந்த பிறகு தனிமையும், மனவேதனையுமாக வாழும் காரா ஜோர்-எல் என்கிற சூப்பர்கர்ல், தனது 23-வது பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, தனது குடும்பத்தை கொடூரமாக கொன்ற க்ரெம் மீது பழிவாங்க துடிக்கும் சிறுமி ரூத்தியை சந்திக்கிறார்.
ஆரம்பத்தில் அவளது பயணத்தில் இணைய மறுக்கும் சூப்பர்கர்ல், தனது செல்ல நாய் கிரிப்டோ தாக்கப்படுவதால், ரூத்தியுடன் இணைந்து விண்வெளி முழுவதும் பரபரப்பான வேட்டையில் ஈடுபடுகிறார்.
இறுதியில் பழிவாங்கும் இந்த பயணம் எந்த முடிவை எட்டுகிறது? சூப்பர்கர்ல் தனது வாழ்க்கையின் நோக்கத்தை மீண்டும் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
சூப்பர்கர்லாக நடித்திருக்கும் மில்லி அல்காக், வழக்கமான சூப்பர் ஹீரோ பாணியில் இல்லாமல், மன உளைச்சல் நிறைந்த இளம்பெண்ணாக கதாபாத்திரத்தை இயல்பாக கையாண்டிருக்கிறார்.
ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருப்பவர், உணர்வுப்பூர்வமான தருணங்களிலும் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ரூத்தியாக நடித்திருக்கும் ஈவ் ரிட்லி, கதையின் உணர்வுக்கு வலு சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
க்ரெம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மத்தியாஸ் ஸ்கோனார்ட்ஸ் அளவான வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் வரும் ஜேசன் மோமோவா மற்றும் சூப்பர்மேனாக டேவிட் கோரன்ஸ்வெட் ஆகியோர் குறைந்த நேரத்தில் வந்தாலும் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.
இயக்கம்
காமிக்ஸ் கதையை அடிப்படையாக கொண்டு இயக்கியிருக்கும் கிரேக் கில்லெஸ்பி, வழக்கமான சூப்பர் ஹீரோ கதையை மட்டும் சொல்லாமல், இழப்பு, பழிவாங்குதல், மனிதநேயம் போன்ற உணர்வுகளையும் அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார்.
குறிப்பாக சூப்பர்மேனின் நிழலில் இல்லாமல், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கும் சூப்பர்கர்லின் பயணத்தை வித்தியாசமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஆனால், சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்வதும், வில்லன் கதாபாத்திரத்திற்கு போதிய அழுத்தம் இல்லாததும், கிளைமாக்ஸ் எதிர்பார்த்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தாததும் படத்தின் பலவீனமாக இருக்கிறது.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவாளர் ராப் ஹார்டியின் கேமரா விண்வெளி உலகத்தை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. பல கிரகங்கள், விண்வெளி சண்டைகள் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் தரமாக அமைந்திருக்கின்றன.
இசை
ஜங்கி எக்ஸ்எல்-ன் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

