ஸ்டார் படத்தின் புதிய அப்டேட்

டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் அடுத்ததாக இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்துள்ளார்.இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார் படத்தின் புதிய அப்டேட்
Published on

டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் அடுத்ததாக இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . இளன் இதற்கு முன் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கவின், லால், கீதா கைலாசம், அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் பாடலான விண்டேஜ் லவ் சில வாரங்களுக்கு முன்  வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படம் வெளியாகும் தேதி அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் நட்சத்திரம் பார்க்க நாள் குறிச்சாச்சி என்ற தலைப்பில் படத்தின் இயக்குனரான இளன் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com