

தனக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ருஷ்டி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் காதலாகி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. அதன்பிறகு இவர் யுத்தம் செய், ஏப்ரல் ஃபூல், மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன் என தொடர்ச்சயாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி இணைய தொடர் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் ஸ்ருஷ்டி டாங்கே பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில், நடிகை ஸ்ருஷ்டி டாங்கே கையில் விருதுடன் நிற்கும் புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தனக்கு தனியார் நிறுவனம் ஒன்று விருதளித்து கவுரவப்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்தார். பெண்கள் ஒரு துறையில் சிறந்து விளங்குதோடு, மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் செயல்படுவதை பாராட்டி இந்த விருது தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ருஷ்டி குறிப்பிட்டுள்ளார்.
ஜனய்-முக்தய் சமஜ்பூஷன் என்ற இந்த விருது தனக்கு கிடைத்திருப்பது பற்றி பதிவிட்டுள்ள ஸ்ருஷ்டி டாங்கே, "இத்தகைய ஓர் உன்னதமான மற்றும் ஊக்கமளிக்கும் விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதை, எனது பெரும் நற்பேறாக கருதுகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.