Spider Man | ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே டிரைலர் வெளியீடு!

இந்தப் படத்தை டெஸ்டின் டேனியல் இயக்கி உள்ளார்.
Spider Man | ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே டிரைலர் வெளியீடு!
Published on

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்ட திரைப்படங்களில் ஒன்று ஸ்பைடர் மேன். மார்வல் நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படம் வருகிற ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், ஸ்பைடர் மேன் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கும் இப்படத்தில் ஸெண்டயா, ஜேக்கப் பேட்டலோன், சாடி சிங், லிஸா காலோன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஸ்பைடர் மேன் முதல் பாகமான `ஸ்பைடர் மேன்: ஹேம் கம்மிங்'கில் டாம் ஹாலண்ட் கதாநாயகனாக நடித்திருந்தார், அதனைத்தொடர்ந்து, `ஸ்பைடர் மேன் ஃபார் ஃபிரம் ஹேம்' படமும், கடைசியாக 3-வது பாகமாக `ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்' படமும் வெளியாகின. இந்த மூன்று திரைப்படங்களையும் ஜான் வாட்ஸ் இயக்கி இருந்தார்.

இதைத் தொடர்ந்து உருவாகி இருக்கும் `ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே' 4-வது பாகமாக உருவாகி இருக்கிறது. இதனை டெஸ்டின் டேனியல் இயக்கி உள்ளார். இந்தப் படம் உலகளவில் ஜூலை 31-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com