

தெலுங்கு திரை உலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம்சரண் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தெலுங்கு திரை உலகில் இருந்து வருகிறார்.
தற்போது பிரமாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் ‘பெத்தி’ படத்தில் ராம்சரண் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு சண்டைக் காட்சியில் ராம்சரணுக்கு திடீர் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் ராம்சரண் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்தநாளை குடும்பத்தினரும் ரசிகர்களும் திருவிழாவாக கொண்டாடினார். ராம்சரண் பிறந்தநாளையொட்டி சிரஞ்சீவி வீட்டில் சிறப்பு யாகம் நடந்தது. யாகத்தின் முன் ராம்சரண் அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் மற்றும் அவரது சிறுவயது படங்களை சிரஞ்சீவி பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.