கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு கிராம மக்களுடன் வைப் செய்த சூரி- ஐஸ்வர்யா லட்சுமி

நடிகர் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்'.திரைப்படம் இன்று ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியானது.
கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு கிராம மக்களுடன் வைப் செய்த சூரி- ஐஸ்வர்யா லட்சுமி
Published on

நடிகர் சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் 'மாமன்'. கடந்த மே 16 ஆம் தேதி இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்தார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கினார். திரைப்படம் இன்று ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியானது.

இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சூரியின் சொந்த ஊரில் உள்ள கோவில் திருவிழாவில் சூரி மற்றும் ஐஷ்வர்யா லட்சுமி கலந்து கொண்டனர். மக்களுடன் ஃபோட்டோ எடுத்துக் கொண்டும், நடன கலைஞர்களுடன் ஜாலியாக வைப் செய்தனர். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com