LIK Movie | பிரதீப் ரங்கநாதனுக்கு கடவுள் ஆசீர்வாதம் ரொம்ப அதிகம் - எஸ்.ஜே. சூர்யா

எல்.ஐ.கே. திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
LIK Movie | பிரதீப் ரங்கநாதனுக்கு கடவுள் ஆசீர்வாதம் ரொம்ப அதிகம் - எஸ்.ஜே. சூர்யா
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

திரையரங்குகளில் பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தின் வெற்றி கொண்டாடாட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா பிரதீப் ரங்கநாதனிடம் ஏழு ஆண்டுகளுக்கு முன் கூறியதை நினைவுகூர்ந்தார்.

அப்போது பேசிய அவர், "உலகம் முழுக்க இருந்து மெசேஜ்கள் வருகிறது — மலேசியா, சிங்கப்பூர், டொரண்டோ… நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாத நண்பர்கள்கூட மீண்டும் தொடர்பு கொள்கிறார்கள். அது எல்.ஐ.கே. படத்தின் வெற்றியை சொல்கிறது. பிரதீப் ரங்கநாதன் சாருக்கு கடவுளின் ஆசீர்வாதம் ரொம்ப அதிகம்.

ஒரு சாதாரண ஆரம்பத்திலிருந்து இன்று பெரிய ஹீரோவாக உயர்ந்திருக்கிறார். அவருடைய பயணம் உண்மையிலேயே பிரமிப்பானது. நான் எப்போதும் மனதில் பட்டதை தான் சொல்வேன். அதுபோலவே, அவர் நடித்ததை பார்த்தபோது — “நீங்கள் பெரிய அளவுக்கு போவீர்கள்” என்ற நம்பிக்கை வந்தது. நான் ஏழு வருடம் முன்பு சொன்னது,  அது இன்று உண்மையாகி இருக்கிறது," என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com