பிரபல பாடகி சுமன் கல்யாண்பூர் உயிரிழப்பு

இவர் நா நா கர்தே பியார் தும்ஹின் சே மற்றும் தும்னே புகாரா அவுர் ஹம் சாலே ஆயே போன்ற பாடல்களை பாடியுள்ளார்.
பிரபல பாடகி சுமன் கல்யாண்பூர் உயிரிழப்பு
Published on

காலத்தால் அழியாத வெற்றிப் பாடல்களுக்கு பெயர் பெற்ற மூத்த பாடகி சுமன் கல்யாண்பூர், உடல்நல பிரச்சினைகளால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அவரது இல்லத்தில் காலமானதாக நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

"லோகண்ட்வாலாவில் உள்ள தனது இல்லத்தில், முதுமை காரணமாக சுமன் ஜி இரவு சுமார் 8 மணியளவில் காலமானார். அவர் அமைதியாக உயிர் நீத்தார். கடந்த சில நாட்களாக, அவர் தனது சொந்தப் பாடல்களையே கேட்டு வந்தார்," என்று சுமன் சுகந்த் தெரிவித்தார்.

கல்யாண்பூர் 1960கள் மற்றும் 1970களில் தனது இனிமையான குரலால் புகழ்பெற்றார். அக்காலகட்டத்தின் முன்னணி பின்னணிப் பாடகியான லதா மங்கேஷ்கருடன் இணைந்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தார்.

ஆஜ்கல் தேரே மேரே ப்யார் கே சார்ச்சே, நா நா கர்தே ப்யார் தும்ஹின் சே மற்றும் தும்னே புகாரா அவுர் ஹம் சாலே ஆயே ஆகியவை அவரது மிகவும் பிரபலமான பாடல்களில் சில. அவர் இந்தி, மராத்தி, அஸ்ஸாமி, கன்னடம், பெங்காலி மற்றும் ஒடியா உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்தார். மேலும் அவர் பக்திப் பாடல்கள், கஜல்கள் மற்றும் தும்ரிகளையும் பாடினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com