

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். வாலி, துள்ளாத மனமும் துள்ளும், ஜோடி, ப்ரியமானவளே, பஞ்சதந்திரம் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதையடுத்து, சிம்ரன் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அதில் சிம்ரனின் அடுத்த படத்திற்கு 'டீச்சர்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக டைட்டில் டீசர் வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
'நீத்தோ' படத்தின் மூலம் அறிமுகமான பாலு ஷர்மா, ' டீச்சர்' படத்தை இயக்குகிறார் . இப்படத்தை ஒயிட்நைட்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் சூப்பர் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க உள்ளன.
கதைக்களம், படக்குழுவினர் மற்றும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.